இன்ஸ்டாகிராம் மூலம் பழகியவரை நம்பிச்சென்று கற்பை இழந்த மாணவி


இன்ஸ்டாகிராம் மூலம் பழகியவரை நம்பிச்சென்று கற்பை இழந்த மாணவி
x
தினத்தந்தி 20 May 2022 1:32 AM IST (Updated: 20 May 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை புதூரை சேர்ந்த 21 வயது மாணவி, தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கு அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கவிபாலன் (23) பழக்கமானார். இருவரும் நேரில் சந்தித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

அப்போது கவிபாலன் அந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. எனவே கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிபாலனை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று கூறி தன்னை மறந்து விடுமாறு தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கவிபாலனை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் மாணவர் கைது

சிவகங்கையை சேர்ந்த 25 வயது இளம்பெண் மதுரையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேஸ்புக் மூலம் இவருக்கு, அல் அமீன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான முகமது பைசல்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில், முகமது பைசல் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியபோது, முகமது பைசல் மறுத்து விட்டார். பாதிக்கப்பட்ட அந்த பெண், தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதல் வயப்பட்டு, இளம்பெண்கள் பலர் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

எனவே சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெண்கள், மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது, என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story