திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி - கோவில் நிர்வாகம் தகவல்


திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி - கோவில் நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 20 May 2022 2:12 PM GMT (Updated: 2022-05-20T21:05:47+05:30)

எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் 30-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த உண்டியல் எண்ணும் பணி இன்று நிறைவு பெற்றது. இதில் ஒரு கோடியே 12 லட்சத்து 11 ஆயிரத்து 598 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story