ஆவடியில் இரவு மாரத்தான் போட்டி


ஆவடியில் இரவு மாரத்தான் போட்டி
x

ஆவடியில் இரவு மாரத்தான் போட்டியினை சென்னை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

சென்னை

போதையில்லா தமிழ்நாடு என்ற பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவடியில் இரவு மாரத்தான் போட்டி ஏற்கனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2-ம் கட்டமாக நேற்று இரவு 7.30 மணிக்கு ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கியது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த இரவு மாரத்தான் போட்டி 21 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 5 கி.மீ. என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி சுங்கச்சாவடி வரை மூன்று பிரிவுகளின் தூரத்தை கடந்து மீண்டும் போட்டி தொடங்கிய தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள், பொதுமக்கள், போலீசார் என சுமார் 6000 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி. கூடுதல் கமிஷனர்கள் அஸ்ரா கர்க், சுதாகர், இணை கமிஷனர்கள் விஜயகுமார், மனோகரன், துணை கமிஷனர்கள் பாஸ்கரன், ஜெயலட்சுமி, ஸ்ரேயா குப்தா, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story