நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்


நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. விழா கமிட்டி தலைவா் தங்கையா தலைமை தாங்கினார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராமநாத், சாய் சித்தா மருத்துவமனை மருத்துவா் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாய் கிளினிக் சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரை செங்கோட்டை அரசு ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர்கள் ஹரிஹரன், சிந்து ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கினர். பின்னா் அம்மையப்பர் திருவாசக குழு தலைவா் திருவாசகி சிவபகவதி மற்றும் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. முன்னதாக நித்திய கல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பணியாளா்கள் ஆறுமுகம், ராம்ராஜ், கல்யாணி, ஜெயந்தி, முப்புடாதி, சாரதா, மல்லிகா, அருணாபாரதி, விழா கமிட்டி நிர்வாகிகள் சிவா, இசக்கி, பி.பி.எம்.சாமி, ஆடிட்டர் சங்கர், குருசாமி, மாரியப்பன், அருண், வீரபுத்திரன், கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


Next Story