நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்


நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் உள்ள ராசன்கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் பவுன் சுப்பிரமணியன் வரவேற்றார். முகாமில் வாய்மேடு சித்த மருத்துவ அலுவலர் கவிதா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கியதோடு, மழைக்கால நோய்கள் பற்றியும், அவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவதற்கான ஆலோசனைகளையும் எடுத்துக் கூறினார். இதில், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story