நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மீது வழக்கு


நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Aug 2023 9:30 PM GMT (Updated: 19 Aug 2023 9:30 PM GMT)

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மீது வழக்கு

நீலகிரி

ஊட்டி

மதுரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதையொட்டி நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் மதுரைக்கு நேற்று மாலை முதல் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வினர், மதுரை மாநாடு வெற்றி பெற வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்காக ஊட்டி கேசினோ சந்திப்பில் இருந்து மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் பழங்கள் வழங்கினர். இந்த நிலையில் அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்று பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாகவும் கூறி ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Related Tags :
Next Story