நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிதாக இணைய தகுதிச்சுற்றுக்கான லீக் போட்டி-கோத்தகிரி புளூ மவுண்டன் அணி அபார வெற்றி


நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில்  புதிதாக இணைய தகுதிச்சுற்றுக்கான லீக் போட்டி-கோத்தகிரி புளூ மவுண்டன் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 23 Aug 2022 4:28 PM IST (Updated: 23 Aug 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் சி டிவிஷனில் புதிய அணியை உறுப்பினராக சேர்ப்பதற்கான தகுதிச் சுற்று லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி அபார வெற்றிப் பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி, ஆக.24-

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் சி டிவிஷனில் புதிய அணியை உறுப்பினராக சேர்ப்பதற்கான தகுதிச் சுற்று லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி அபார வெற்றிப் பெற்றது.

11 அணிகள் விண்ணப்பம்

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் என 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு ஆண்டு தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டிவிஷனிலும் தலா 10 அணிகள் உறுப்பினர்களாக தங்களைப் பதிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சி டிவிஷன் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் பி டிவிஷனுக்கும், பி டிவிஷனில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் முதல் டிவிஷனான ஏ டிவிஷனுக்கும் தகுதி உயர்த்தப்படுவர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து விளையாட விருப்பம் தெரிவித்து மொத்தம் 11 அணிகள் விண்ணப்பித்து இருந்தன.

விளையாட தேர்வு

இதன்படி தகுதிச் சுற்று லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் கோத்தகிரி புளூ மவுண்டன் அணி மற்றும் கூடலூர் ராம்பேஜ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி புளூ மவுண்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 360 ரன்களை குவித்தது. தொடர்ந்து 210 பந்துகளில் 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கூடலூர் ராம்பேஜ் அணி வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 245 ரன்கள் வித்தியாசத்தில் கோத்தகிரி புளூ மவுண்டன் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

குன்னூர் லெவன்ஸ் அணி

இதேபோல லீக் போட்டியில் குன்னூர் லெவன்ஸ் மற்றும் உட்டோபியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குன்னூர் லெவன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய உட்டோபியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் குன்னூர் லெவன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


1 More update

Next Story