சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவி ஏற்பு


சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவி ஏற்பு
x

சென்னை ஐகோர்ட்டின் நிரந்த நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்து இருந்தது.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவி ஏற்க உள்ளனர். 2020 டிசம்பர் 3-ல் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story