செல்பி மட்டும் அனுப்புங்க....! தனது பக்தைகளுக்கு நித்தியானந்தா வேண்டுகோள்...!


செல்பி மட்டும் அனுப்புங்க....!  தனது பக்தைகளுக்கு  நித்தியானந்தா வேண்டுகோள்...!
x

நித்யானந்தா பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சென்னை

சென்னை பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.

ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன.

"நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது நித்தியானந்தாவின் சமீபத்திய புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் எலும்பும் தோலுமாக இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் பல கிளைகளை வைத்திருக்கும் நித்தியானந்தாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்ற நோக்கில் கைலாசா நாடு ஒன்றினை அறிவித்து வாழ்ந்து வருகின்றார்.

ஆனால் இவரது குற்றங்கள் வெளிநாடுகளிலும் தெரியவரவே அங்கிருந்து வரும் வருமானம் குறைந்ததோடு, இடையே கொரோனா தாக்கத்தினால் பல இடங்களில் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் கைலாசா பஞ்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

முறையான இந்திய உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் கைலாசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் தெரிவித்திருந்தார். இதனை உண்மையென அறிவிக்கும் நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புகைப்படமும் வெளியாகி அதிர வைத்துள்ளது.

நித்யானந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக இந்தியா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தற்போது நலம்பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புதிய பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், தனது உடல்நிலை சரியில்லாத தகவல் வெளியான நாளிலிருந்து நிறைய பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்தி விடுங்கள்.

பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.

இந்த பதிவை பார்த்த அவரது பக்தர்கள் ஏராளமானோர் நித்யானந்தா பக்தைகள் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.


Next Story