என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக நாளை முற்றுகை போராட்டம்: பாமக அறிவிப்பு


என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக நாளை முற்றுகை போராட்டம்: பாமக அறிவிப்பு
x

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.

சென்னை,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story