என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா


என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா
x

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா கொண்டாடப்பட்டது.

கடலூர்

நெய்வேலி,

1957-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அன்று என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கப் பணிகளை தொடங்கிய வரலாற்று நிகழ்வையும், என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த முன்னாள் ஊழியர்களின் சேவைகளையும் நினைவு கூரும் வகையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உதயமான தினவிழா நெய்வேலியில் நடைபெற்றது. இதற்கு நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தலைமை தாங்கி, நெய்வேலி லிக்னைட் அரங்க வளாகத்தில் என்.எல்.சி. நிறுவன கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.நிறுவன முன்னாள் அதிபர்கள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் ஷாஜி ஜான், ஜெய்குமார் ஸ்ரீனிவாசன், மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத்தின் முன்னாள் அதிபர்கள் டாக்டர் எம்.பி. நாராயணன், ஏ.கே. சகாய், எஸ். ஜெயராமன், ஜே.என். பிரசன்னகுமார் மற்றும் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நிறுவன வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் ஊழியர்கள் 10 பேர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் பேசுகையில், பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி மூலம் அனல் மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம், தற்போது காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றலையும் தயாரித்து வருகிறோம். விரைவில் அசாம் மாநிலத்தில் புனல் மின்சக்தி எனப்படும் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யும் துறையிலும் கால் பதிக்க உள்ளது என்றார். விழாவில் மனிதவளத்துறை செயல் இயக்குனர் சதீஷ் பாபு, தலைமை பொது மேலாளர் தியாகராஜு மற்றும் மூத்த அதிகாரிகள், தொழிலாளர்-ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், அனைத்து நலச்சங்ககளின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story