எடப்பாடி பழனிசாமி தரப்புடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை : ஓபிஎஸ் திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஒருமுறை இணைந்தற்கான நமக்குக் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று மத்திய அரசே சொல்லிவிட்டது" என்றார்.
Related Tags :
Next Story