நெல்லை திமுக மேயருக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்...!


நெல்லை திமுக மேயருக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்...!
x

மேயர் சரவணனுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 44 வார்டுகளில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளை சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் மேயராக சரவணன் என்பவரும், துணை மேயராக ராஜுஎன்பவரும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடயே மேயர் சரவணனுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு மாமன்ற கூட்டங்களிலும் எதிரொலித்தது.

கடந்த டிசம்பர் 6-ம் தேதி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி 38 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பினர். இதனை ஏற்று கொண்ட அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடத்தப்படும் என அறிவித்தார். இதுகுறித்து ஆணையாளர் கடந்த டிசம்பர் 27-ம் தேதி அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கூட்டத்திற்கு பிறகும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்வதாக 30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story