"கவர் இல்லை ரூ.5க்கு பை வாங்குங்க" என்ற காய்கறி கடை ஊழியரை தாக்கிய நபர்கள் - போலீசார் விசாரணை
"கவர் இல்லை ரூ.5க்கு பை வாங்குங்க" என்ற காய்கறி கடை ஊழியரை தாக்கிய மர்ம நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே ஒரு காய்கறி கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை இந்த கடைக்கு இரு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் 3 கிலோ வெங்காயம் வாங்கி உள்ளனர். அப்போது அவர்கள் வெங்காயத்தை கவரில் (பிளாஸ்டிக் கவர்) போட்டு கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.
அப்போது கடை ஊழியர் பிளாஸ்டிக் கவர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை எங்களால் தர இயலாது. மேலும் ரூ.5 கொடுத்து துணிப்பையை வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை ஊழியரை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கடை ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்களை சிசிடிவி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story