'மீன் குழம்பில் மீன் இல்லை ' - ஓட்டலில் கலாட்டா...!


மீன் குழம்பில் மீன் இல்லை  - ஓட்டலில் கலாட்டா...!
x

திருவள்ளுரில் சாப்பிட வந்த நபர் மீன் குழம்பில் மீன் இல்லாததால் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருவள்ளூர்


திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் உணவு சாப்பிட ஒரு நபர் வந்துள்ளார். அவர் சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு ஊழியரிடம் மீன் குழம்பு எடுத்துவர கூறியிருக்கிறார்.

ஊழியர் மீன் குழம்பு கொண்டு வைத்துள்ளார்.அதை பார்த்த அந்த நபர் அவரிடம் 'மீன் குழம்பு இருக்கு அதில் ஏன் மீன் இல்லை' எனக் கேட்டு ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது அந்த ஊழியர் நீண்ட நேரம் ஆனதால் குழம்பு மீன் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதற்கு குடிபோதையில் இருந்த நபர் 'நான் பணம் கொடுத்து சாப்பிடுகிறேனே என்ன நல்லா கவனிக்க கூடாதா ' என கேட்டு அவர் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story