அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு


அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
x

அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

சென்னை,

ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் வயிறார சாப்பிட்டு திருப்தியடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமே, அம்மா உணவகங்கள். ஏழை மக்களின் பசி பிணியை போக்கிய இந்த திட்டம், சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,

அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை. அம்மா உணவகத்தை எந்த இடத்திலும் மூடவில்லை. அம்மா உணவகத்தை மூட முதல்-அமைச்சரும் சொல்லவில்லை என தெரிவித்தார். அம்மா உணவகங்களை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு கடந்த ஆட்சியை விட அதிகமாக நிதி ஒதுக்கி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.129 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில்,

"எந்த அம்மா உணவகத்தில் உணவு தரம் இல்லை என குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்காவது தவறுகள் நடக்கலாம், எந்த இடத்தில் என்பதை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.


Next Story