தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
x

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,


சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சில இடத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. பி.எ 4 தொற்று உறுதியான நிலையிலும் சென்னை மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகை உள்ளதால் அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றும் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் மட்டும் பரவிய குரங்கு அம்மை தற்போது ஆஸ்திரேலிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 87 பேர் மட்டுமே டெங்கு பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல், கவனமுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story