தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை  : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் ,கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது ;

பன்னாட்டு விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரும் வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையங்களில் குரங்கம்மை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

தற்போது குரங்கம்மையின் பாதிப்பு 63 நாடுகளில் கடந்திருக்கிறது.தமிழகத்துக்கும், கேரளாவுக்கு இடையே உள்ள 13 எல்லைப் புறங்களிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இன்றுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார் .


Next Story