கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - கி.வீரமணி டுவீட்


கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - கி.வீரமணி டுவீட்
x

கலைஞர் கருணாநிதி இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், "மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்" என்றார்.

அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

ஆம், கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - உற்சாகப் பெருக்கம் - இளைஞர்கள் படிக்க வேண்டிய பொதுத் தொண்டின் புத்தகம். திராவிட இயக்கத்திற்கு ஏற்படும் சவால்களைச் சந்திப்போம். மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் எதிராக ஏற்பட்டுள்ள அறைகூவலின் ஆணி வேரை வீழ்த்துவோம் என்ற சூளுரையை இந்நாளில் ஏற்போம். வாழ்க கலைஞர்!

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story