கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் கூறியதாவது:- நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 2-ம் இடம் வகிக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாறு பாசனம் மூலமும், ஏரிநீர், கிணறு பாசனம் மூலமும் விவசாயம் நடக்கிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன கால்வாய்களை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அகலப்படுத்தி தர வேண்டும்.

கடந்த வாரம் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்ய ரூ.76 கோடி ஒதுக்கி ஒரு ஏக்கருக்கு 50 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ், உயிர் உரங்கள், விதை நெல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சம்பா சாகுபடி செய்யும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சம்பா தொகுப்பு திட்டம் தர வேண்டும் என்றனர்.

முன்னதாக அவர்கள் கயிறு இழுப்பதுபோன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story