காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்
x

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

சேலம்

சத்துணவு ஊழியர்கள்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நூதன போராட்டம் நடந்தது.

மாவட்ட அமைப்பாளர் மணிச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி வரவேற்றார். மாநில செயலாளர் மகேஸ்வரி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நூதன போராட்டம்

போராட்டத்தில் பெண் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதாக கூறி மடியேந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் வசமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை சத்துணவு மையங்களுக்கு அரசே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story