தண்டையார்பேட்டையில் வடமாநில கட்டிடத்தொழிலாளி வெட்டிக்கொலை


தண்டையார்பேட்டையில் வடமாநில கட்டிடத்தொழிலாளி வெட்டிக்கொலை
x

தண்டையார்பேட்டையில் வடமாநில கட்டிடத்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுர்பாத் சர்தார்(வயது 17) என்பவரும் கட்டிட வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை சுர்பாத் சர்தார், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுர்பாத் சர்தாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுர்பாத் சர்தார் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்?, கட்டிடத்தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story