விழுப்புரத்தில்வடமாநில வாலிபர் தற்கொலைபோலீசார் தீவிர விசாரணை
விழுப்புரத்தில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்
புதுடெல்லி கொக்புரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா மகன் முகமது மாலிக் (வயது 30). இவர் விழுப்புரம் மணிநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று பழைய எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது முகமது மாலிக் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகமதுமாலிக்கின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story