தக்கலை அருகே வட மாநில தொழிலாளி 'திடீர்' சாவு


தக்கலை அருகே வட மாநில தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 10:03 AM GMT)

தக்கலை அருகே வட மாநில தொழிலாளி 'திடீர்' என இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை, ஜன.2-

தக்கலை அருகே உள்ள பூக்கடை, புல்லுவிளையில் முந்திரி பருப்பு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு அஸாம் மாநிலம் பரமச்சரி பகுதியை சேர்ந்த பிஜூ போறோ (வயது33) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சக தொழிலாளர்களுடன் தூங்கினார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் எழும்பவில்லை. இதனால், அவரை சக தொழிலாளர்கள் எழுப்ப முயன்றனர். அப்போது அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நிறுவன மேலாளர் மனோகரன் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story