வடமாநில தொழிலாளி பலி


வடமாநில தொழிலாளி பலி
x

சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் சென்ராயன்(வயது 35). கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலையில் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக தொழிற்சாலையில் தன்னுடன் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ெதாழிலாளி மனோஜ் குமார் சகோ(36) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். தொடர்ந்து அவர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு தொழிற்சாலைக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சென்ராயன் ஓட்டினார்.

தடுப்பில் மோதியது

கோவை-பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மனோஜ்குமார் சகோ பலத்த காயம் அடைந்தார். சென்ராயன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் தப்பினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மனோஜ்குமார் சகோவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story