வடகிழக்கு பருவமழை: நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும் - அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி


வடகிழக்கு பருவமழை:  நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும் - அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  பேட்டி
x

“இந்த வருடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகத் துரிதமாக இருக்கும்” வடகிழக்கு பருவ மழை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வடகிழக்கு பருவ மழைக்காக முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் அமைச்சர்களும் அனைத்து துறை செயலர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையின் செயலாளரும் நேரடியாக பேச வேண்டுமென முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த முறை மழை பாதித்த இடங்களை கவனமாக வைத்து மீண்டும் அந்த இடத்தில் பாதிப்பு வராதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் கிராமங்களிலும் பருவ மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர்கள் உள்பட எல்லா அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

மத்திய அரசுடைய வானிலை அறிக்கையும், தனியார் அறிக்கைகளையும் வைத்து எதில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எந்த அறிக்கை சொல்கிறதோ அதை எடுத்துக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக துரிதமாக இருக்கும். மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் 1700க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழைக்கு பின் பாதிப்புகள் வராத அளவுக்கு நூறு சதவீதம் அளவிற்கு அரசின் நடவடிக்கை இருக்கும். பேரிடர் மேலாண்மை நிதி பாதிக்கப்பப்ட்ட அந்தந்த துறைக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story