வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்
x

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து துறையினரும் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். வீடுகளில் மழைநீர் புகுந்தால் அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்பு குழுவினர் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தாசில்தார் க.குமார், துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணி, மின்வாரியம், வேளாண்மை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story