வடமாநில இளம்பெண் தற்கொலை


வடமாநில இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

மேற்கு வங்காளம் முர்சிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மண்டு சர்தார். இவரது மனைவி அஞ்சலி சர்தார் (வயது 32). இவர் வாசுதேவநல்லூர் ஊருக்கு மேற்கே உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி சர்தார் சம்பவத்தன்று இரவு தேக்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story