கோபி அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோபி அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோபி அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு

கடத்தூர்:

கோபி அருகே வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நூற்பாலையில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போனார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே காணாமல் போன வடமாநில தொழிலாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் நூற்பாலை நிர்வாகம் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறி வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story