பணகுடி, களக்காடு பகுதியில் மின்தடை அறிவிப்பு


பணகுடி, களக்காடு பகுதியில் மின்தடை அறிவிப்பு
x

பணகுடி, களக்காடு பகுதியில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி, களக்காடு துணை மின் நிலையங்களில் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை, கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, வள்ளியூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story