ஆயுள் தண்டனை கைதி கூறிய தகவல்களை மறைத்து சிறைத்துறைக்கு எதிராக செயல்பட்ட துணை ஜெயிலருக்கு நோட்டீஸ்


ஆயுள் தண்டனை கைதி கூறிய தகவல்களை மறைத்து சிறைத்துறைக்கு எதிராக செயல்பட்ட துணை ஜெயிலருக்கு நோட்டீஸ்
x

சேலம் சிறைச்சாலையில், ஆயுள் தண்டனை கைதி கூறிய தகவல்களை மறைத்து சிறைத்துறைக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டில் சிறையின் துணை ஜெயிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் சிறைச்சாலையில், ஆயுள் தண்டனை கைதி கூறிய தகவல்களை மறைத்து சிறைத்துறைக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டில் சிறையின் துணை ஜெயிலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருப்பவர் மாங்கா பிரபு. இவரை மற்றொரு கொலை வழக்கில் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாங்காபிரபு கோர்ட்டில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏறப்டுத்தியது.

இந்த நிலையில் மாங்கா பிரபுவை கோர்ட்டிற்கு ஆஜர்படுத்த அழைத்து செல்வதற்கு முன்பு, அவர் சிறை கூடுதல் கண்காணிப்பாளரை பார்க்க வேண்டுமென, சிறையின் துணை ஜெயிலர் கோவிந்தசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை சிறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தாமல், கைதியை கோவிந்தசாமி அழைத்து சென்றதாக தெரிகிறது.

இந்த தகவல் அறிந்த சிறை கூடுதல் கண்காணிப்பாளர், கைதி தெரிவித்ததை தன்னிடம் தெரிவித்திருந்தால் தர்ணா போன்ற போராட்டங்கள் ஏற்பட்டிருக்காது என தெரிவித்த நிலையில், இது குறித்து துணை ஜெயிலரிடம் விளக்கம் கேட்டு கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வினோத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story