அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
x

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் எப்ரல் 15-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 14-ம் தேதி கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு தகுதியானவர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story