நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 12:45 AM IST (Updated: 13 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புங்கனூர்-கொண்டல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கனூர் உயர் மின் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக புங்கனூர், பெருமங்கலம், கற்கோவில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், ஆலஞ்சேரி, கொண்டல், கீழத்தேனூர், ஆதமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கொள்ளிடம்-தைக்கால்

ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆணைக்காரன்சத்திரம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், கோபால சமுத்திரம், தைக்கால், சீயாலம், குமிலங்காடு, துளசேந்திரபுரம், சரஸ்வதிவிளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, விசுவநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

மணல்மேடு

மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வடவஞ்சார் உயர் அழுத்த மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கடக்கம், ரெட்டிப்பாளையம், கடுவங்குடி, சித்தமல்லி, குறிச்சி, விராலூர், வேட்டையம்பாடி, வடவஞ்சார் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story