தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு


தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர்  விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2024 10:26 AM IST (Updated: 25 Jan 2024 10:38 AM IST)
t-max-icont-min-icon

மெச்சத்தக்க சேவைக்கான குடியரசு தலைவர் விருது 21 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படும். மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பிரிவில் 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமெண்டண்ட் ராஜலட்சுமி, துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மெச்சத்தக்க சேவைக்கான குடியரசு தலைவர் விருது 21 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story