நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாகர் கோவில்- திருவனந்தபுரம் இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
பயனிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து வரும் 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு திருவணந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் அதேநாள் காலை 3.32 மணிக்கு திருவணந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story