பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு


பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
x

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாபிஷேகம்

மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பவுர்ணமியையொட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைந்து தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story