குமரியில் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி புழல் சிறைக்கு மாற்றம்


குமரியில் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி புழல் சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒழுகினசேரி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சொத்தவிளை ஒசரவிளையை சேர்ந்த செந்தில் என்ற தாதா செந்தில் (வயது 63) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செந்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து வெளியே வந்த செந்தில் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் செந்திலை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரை முதலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கைதான செந்தில் மீது கொலை வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் செந்தில் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story