இனி எல்லாமே ஒரே இடத்தில்... "விரைவில் இ-சேவை மையம் 2.0" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்


இனி எல்லாமே ஒரே இடத்தில்... விரைவில் இ-சேவை மையம் 2.0 - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
x

விரைவில் இ-சேவை மையம் 2.0 கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விரைவில் இ-சேவை மையம் 2.0 கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற வினா, விடை நேரத்தின்போது அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலமாக வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 600 அரசு பரிவர்த்தனைகள், 235 சேவைகள் என அனைத்தையும் இ-சேவை மையங்களில் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அரசின் திட்டங்களும் சேவைகளும் வெளிப்படை தன்மையுடன் விரைவாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அதோடு மத்திய அரசின் திட்டங்களையும் இ-சேவை மையம் வாயிலாக வழங்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story