தேனியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி
நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும், கேரளாவில் கம்பத்தை சேர்ந்த ஜீப் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களை ஆந்திரா மாநில போலீசார் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். மண்டல செயலாளர் பிரேம்சந்தர் மற்றும் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மணிப்பூர், கேரளா, கிருஷ்ணகிரி சம்பவங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story