கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கம்பம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலம் கம்பம்மெட்டு அருகே தமிழக ஜீப் டிரைவரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களை ஆந்திரா மாநில போலீசார் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் மதிவாணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.