மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2023 1:00 AM IST (Updated: 25 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து டாடாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் கோவை டாடாபாத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசுகள் உரிய நடவடிக் கை எடுக்கவில்லை.

இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படு கின்றனர். எனவே மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தில் காயமடைந்தது போல் தங்களது உடலில் கட்டுகளை போட்டுக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்டு சிவசாமி, ம.தி.மு.க. செல்வராஜ் மற்றும் வெண்மணி, சர்புதீன், கலையரசன், ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story