விழிப்புணர்வு பாடல் மூலம் நூதன போராட்டம்
புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பாடல் மூலம் நூதன போராட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பஸ் நிலையத்தில் நேற்று புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் விழிப்புணர்வு பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி தமிழ்க்கனல் தலைமை தாங்கினார்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பா.ஜ.க. அரசு நாடு முழுவதும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதாக விழிப்புணர்வு பாடல்களை பாடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வீராசாமி, சுப்ரமணி, குப்பன், பால்சத்யன், சிவஞானம், கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story