எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரம் - முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்


எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரம் - முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
x

எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

மதுரை


எண்ணும், எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்ைத முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழக குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண கடந்த ஆண்டுஎண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் தொலைநோக்கு இலக்காகும்.

இதற்கிடையே மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும் ஆசிரியரிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடம் முக்கியமாக பெற்றோர்களிடம் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

இந்த வாகனத்தில் கற்றல் கற்பித்தல் முறைகள், கலைக்குழுவினரின் கற்றல் கற்பித்தல் முறைகள், மாணவர்களின் செயல்பாடுகள் ஆகியன எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் கோரிப்பாளையம், புதூர் பஸ் நிலையம், கடச்சநேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஒத்தக்கடை, திருமோகூர் விலக்கு, அம்மாபட்டி,காலிகாப்பான், ஒத்தப்பட்டி மற்றும் கருப்பாயூரணி ஆகிய இடங்களில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிசாரம் செய்கிறது.


Next Story