மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவதால் எண்ணும் எழுத்தும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவதால் எண்ணும் எழுத்தும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவதால் எண்ணும் எழுத்து திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவதால் எண்ணும் எழுத்து திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, மாலா, துணை செயலாளர்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ்குமார், ஜோசப், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாய தைனேஸ், ஜெயக்குமார், சிங்கராயர், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திரும்ப பெற வேண்டும்

கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இத்திட்டத்தால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து நாள்தோறும் இணையவழியில் தேர்வு நடத்துவதும், மதிப்பீடு செய்வதுமே நடைபெற்று கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பல்வேறு புள்ளி விவரங்களை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.

500 பேர் பங்கேற்பு

ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் 29-ந் தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.


Next Story