கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை


கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை
x

நாகர்கோவில் அருேக கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகள் அன்பு விஜய் ஞானஜோதி (வயது 27). கன்னியாஸ்திரியான இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு தேனியில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றலாகி நாகர்கோவில் அருகே உள்ள மாடத்தட்டுவிளைக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவருடன் வேறு சில கன்னியாஸ்திரிகளும் வசித்தனர்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பு விஜய் ஞானஜோதி தான் தங்கியிருந்த வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவருடன் தங்கியிருந்த சக கன்னியாஸ்திரிகள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு விஜய் ஞானஜோதி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story