செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், முறையான போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்து 7 ஆண்டிற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் பிரவீனா தலைமை தாங்கினார். கவிதா தொடக்க உரையாற்றினார். அன்பரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story