காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நர்சுகள் ஆர்ப்பாட்டம்


காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
x

காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாமக்கல்லில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

துணை சுகாதார மையங்களில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தாமணி, பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடந் ஆண்டு அங்கன்வாடியில் இருந்து செவிலியர் பயிற்சி பெற்று பதவி உயர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 622 பேரின் பணியினை அரசு திடீரென நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இவர்களின் வாழ்வாதார பிரச்சினையை கருத்தில் கொண்டு 622 பேர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான நா்சுகள் கலந்துகொண்டனர்.


Next Story