தாய்-சேய் நலப்பணிகளில் மட்டுமே செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும்


தாய்-சேய் நலப்பணிகளில் மட்டுமே செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 July 2023 7:30 PM GMT (Updated: 29 July 2023 7:30 PM GMT)

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொதுசுகாதார துறை கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொதுசுகாதார துறை கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ரோணிக்கம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாண்டிமாதேவி வரவேற்றார். இதில் மாநில தலைவர் நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிராமங்கள், மலைப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவாக மருத்துவ சேவை கிடைப்பதற்கு, காலியாக இருக்கும் கிராம சுகாதார பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாய்-சேய் நலப்பணி பாதிக்கப்படுவதால் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஆன்லைன் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தாய்-சேய் நலப்பணிகளில் மட்டுமே கிராம சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும். அதேபோல் மலைப்பகுதி, குக்கிராமங்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்திர தனுஷ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஜோஸ்பின் அமலா நன்றி கூறினார்.


Next Story