சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கயம்
காங்கயம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் டி.சுசீலா தலைமை தாங்கினார். இதில் சத்துணவு திட்டத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை கொண்டு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சுய உதவிக்குழு மூலம் செயல்படுத்துவதையும், தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். சத்துணவு மையங்களில் சமையல் அறைகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழு மூலம் பயன்படுத்துதல் போன்ற உத்தரவுகள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணை தலைவர் குப்புசாமி உட்பட சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.