கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்


கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

நீலகிரி

கூடலூர்

நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் கூடலூரில் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தினர். சிபிஆர் சுற்றுச்சூழல் மைய கள அலுவலர் குமாரவேல், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஆகியோர் சிறுதானியங்களை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நோயில்லாமல் வாழ்தல் போன்றவை குறித்தும் பாரம்பரிய உணவு முறையில் இருந்து விலகியதால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கங்கள் அளித்தனர்.

நிகழ்ச்சியில் சிறுதானிய உணவு தயாரிப்பில் பயிற்சி பெற்ற பெண்கள் சிறுதானியங்கள் மூலம் தயாரித்த 15 வகையான சத்து உணவுகள் மற்றும் சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டது. இதே போல் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அவர்களுக்கு தேங்காய் பால் மற்றும் முளை கட்டிய தானியங்கள் தயாரிக்கப்பட்ட சுண்டல் ஆகியவையும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அறக்கட்டளைகளைச் சேர்ந்த விஜயகுமாரி, ரீட்டா, மாலதி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story